கஞ்சா கருப்பு, சந்தானம், பிரகாஷ்ராஜ், ஜோதிர்மயி, மதுமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க... இம்சை அரசன் படத்தை இயக்கிய சிம்புதேவன் அடுத்த படம் அறை எண் 305ல் கடவுள்.
இயக்குனர் ஷங்கரின் எஸ்.பிலிம்ஸ் தான் படத்தை தயாரிக்கிறது.முதல் படத்தைப் போலவே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறார் சிம்புதேவன்.
வருகிற பதினாலாம் தேதி பாடல் காட்சியோடு படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் கஞ்சா கருப்பு, சந்தானம் இருவரையும் கூப்பிட்ட இயக்குனர் படம் முடிந்து ரிலீஸாகும் வரை இந்தப் படம் பற்றி யாரிடமும் எதுவும் பேசவேண்டாம்.
குறிப்பாக பத்திரிகையாளர்களிடம் பேசும் போது ரொம்ப கவனமாக இருங்கள் என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
இரண்டு பேரும் அதை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஷங்கர் காம்ப்பவுண்ட் என்றாலே ரகசியம் தானா!?