இன்றைய தேதியில் சினிமா உலகின் வள்ளல் என்று புகழப்படுபவர் கானல் நீர் ரித்திஷ்தான்.
ஏழை எளியோருக்கு வாரி வழங்குவதில் வள்ளலாக இருக்கிறார். இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் நாயகன் படத்திற்கு அவருக்கு பத்து லட்சம் சம்பளம் கிடைத்திருக்கிறது. அதை அப்படியே சினிமா யூனியன்களுக்கு நிதி உதவி அளித்துவிட்டார்.
சினிமாவில் லைட் மேன் யூனியன், துணை நடிகர் நடிகைகள் யூனியன், புரொடக் ஷன் யூனியன், டிரைவர்ஸ் யூனியன் என்று பலதரப்பட்ட பத்து யூனியன் ஏழை தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக தலா ஒரு லட்சம் ரூபாயை ஒவ்வொரு யூனியனுக்கு வழங்கி இருக்கிறார்.
நவீன கொடை வள்ளல் என்று சினிமாத் தொழிலாளர்கள் இவரை புகழ்கிறார்கள்.