சிவாஜி சிறப்புக் காட்சியை தவிர்த்த ஷங்கர்

Webdunia
சிவாஜி ரிலீஸாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஓவர்ஆல் எல்லா தரப்பினருமே வழக்கமான ரஜினி டைப் படம், சற்றே ஷங்கர் சாயலும் தெரிகிறது என்று படம் பார்த்த அனைவருமே தெரிவிக்கிறார்கள்.

என்றாலும் படத்தைப் பற்றி மோசமான கமெண்ட் என்று யாரும் கூறவில்லை. ஷங்கர் படத்தில் எதிர்பார்க்கப்படும் வழக்கமான சமூக மெசேஜ் மிஸ்ஸிங் என்று மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.

எது எப்படியோ தியேட்டர்களை முற்றுகையிட்ட சிவாஜி, மராட்டிய சிவாஜியா அல்லது நடிகர் திலகம் சிவாஜியா என்றெல்லாம் யோசிப்பதைக் காட்டிலும், பந்தையத்தில் ஜெயித்து விட்ட சிவாஜி என்றே கூறலாம்.

சந்திரமுகிக்குப் பின் மிகப் பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்டு, அந்த அளவுக்கு பிரமாண்டம் இல்லாவிட்டாலும், வழக்கமான ரஜினிக்கே உரிய ஸ்டைலுடன், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது சிறுவர் பட்டாளங்களையும் மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ளதாம்.

படத்தை இவ்வளவு பிரமாண்டமான முறையில் தயாரித்த ஏவி.எம். நிறுவனத்திற்கே ஷங்கர் மீது சற்று வருத்தமாம்.

ஏவி.எம். சரவணன், எம்.எஸ். குகன் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவன அதிபர்கள் தரப்பில் இந்த வருத்தத்தை ஷங்கரிடம் படம் முடிந்த பின் தெரிவித்தார்களாம்.

இதனால் கோபம் அடைந்த ஷங்கர் தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா புறப்பட்டு விட்டாராம்.

இந்த பூசல் காரணமாகவே எந்த சிறப்புக் காட்சியிலும் ஷங்கர் பங்கேற்கவில்லையாம்.

இந்த பனிமோதலை வெளிக்காட்டிக் கொள்ள மனமில்லாமலேயே வெளிநாட்டில் எங்கோ ஒரு தியேட்டரில் சிவாஜியை குடும்பத்தினருடன் பார்த்தாராம் ஷங்கர் என்று தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்