ஏற்கனவே நாம் செய்தி போட்ட மாதிரி பொல்லாதவன் படத்தின் சர்ச்சை ஓயாது போலிருக்கிறது. நீண்ட நாட்களாக ஹீரோயின் கிடைக்காமல் இருந்த பொல்லாதவன் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.
இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் கதாநாயகி. இப்போது பேரரசு இயக்கத்தில் பழனி படத்தில் நடிக்கிறார். பொல்லாதவன் படத்திற்காக தனுஷூடன் சேர்ந்து ஃபோட்டோ செஷன் கூட எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால் தேதி இல்லை என்று இழுத்தடித்திருக்கிறார். வேண்டவே வேண்டாம் என்று அவருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு, திவ்யா என்று பெயர் மாற்றிக் கொண்ட குத்து ரம்யாவை இப்போது கதாநாயகியாக போட்டிருக்கிறார்கள்.