அசின் இந்தி கஜினியில் நடிக்கப் போனாரும் போனார் இன்னொரு ஸ்ரீதேவி ஆகிவிடுவார் போலிருக்கிறது.
அவரை தேடி நிறைய இந்திப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இந்தி படத்தில் நடிக்கலாம் என்று முடிவுக்கு வந்த அசின் மும்பையில் சொந்தமாக ஃபிளாட் வாங்கி குடியேறிவிட்டாராம்.
இந்தி போக்கிரியில் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். அந்தப் படத்தை இந்தியிலும் பிரபுதேவாவே இயக்கப்போகிறாராம். அதேபோல் டில்லி 6 என்ற இந்தி படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.
இப்போது தமிழில் கமிட்டாகியிருக்கும் படத்தை முடித்துவிட்டு நிரந்தரமாக இந்தி படவுலகிலேயே செட்டிலாகும் திட்டத்தில் இருக்கிறாராம் அசின்.