தொல்.திருமாவளவன் நடித்த அன்புத் தோழி படம் தீவிரவாதத்தை பின்னணியாக கொண்டிருக்கிறது என்று சென்சார் பிரச்சனையில் இருக்கிறது.
மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு சென்றிருக்கும் படத்தின் ரிசல்டை எதிர்நோக்கியிருக்கும் திருமாவளவன் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார்.
பூமணி, கிழக்கும் மேற்கும் படங்களை இயக்கிய களஞ்சியம் இயக்கத்தில் திருமாவளவன் கதாநாயகனாக நடிக்க கலகம் என்னும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகிவிட்டது.
பேரிலேயே கலகம் இருக்கும் இப்படமும் கண்டிப்பாக ஆக்ஷன் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்கிறார்கள். உடம்பெல்லாம் ரத்தத்தோடு ஆயுதம் ஏந்தியிருக்கும் திருமாவளவனின் பத்திரிக்கை போஸ்டர்கள் அதைத்தான் உணர்த்துகிறது.