ரெக்கார்ட் பிரேக்கர்: ஹிட்மேன் ரோஹித் வைத்த புது இலக்கு!

புதன், 3 ஜூலை 2019 (10:42 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா மூன்று சாதனைகளை படைத்துள்ளார். 
 
உலகக்கோப்பை 2019-ல் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 104 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும் எடுத்தனர்.
 
315 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடியதோடு சில சாதனைகளையும் படைத்துள்ளார். அவற்றின் தொகுப்பு இதோ... 
 
1. ஒரே உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககரா சாதனையை சமன் செய்தார் ரோஹித். இருவரும் 4 சதங்கள் விளாசியுள்ளனர்.
2. 533 ரன்களை குவித்து ரோகித் சர்மா 500 ரன்களை தாண்டி சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் உலகக்கோப்பையில் 500 ரன்களை தாண்டியிருந்தார். 
3. 2019 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். வார்னர் 516 ரன்களுடன் 2 வது இடத்தில் உள்ளார். 
 
இந்த மூன்று சாதனைகளை படைத்து ரோஹித் சர்மா அடுத்து விளையாடும் வீரர்களுக்கு புது இலக்கை நிர்ணயித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்