காம்பீர் வைத்த குட்டு தோனிக்கா? ESNP-க்கா?

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (17:00 IST)
தோனி அடித்த சிக்ஸ் மட்டுமே உலகக்கோப்பையை பெற வழிவகுக்கவில்லை என கவுதம் காம்பீர் டிவிட் செய்துள்ளார். 
 
இன்று இதே நாளில் தான் 9 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணி தனது 28 வருட கனவை நிஜமாக்கி கொண்டது.  ஆம், கிரிக்கெட் போட்டியின் மிகப்பெரிய வெற்றி சின்னமான உலககோப்பையை 9 வருடங்களுக்கு முன்னர் 2வது முறையாக இந்திய அணி கைப்பற்றிய நாள் இன்று. இந்த நினைவுகளை நினைவுகூறும் விதமாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் #worldcup2011, #dhoni என இரு ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.  
 
2011 ஆம் ஆண்டும் இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 274 ரன்கள் குவித்தது. 275 என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது.  
சேவாக்கும், சச்சினும் சொற்ப ரன்களில் வெளியேற உலகக்கோப்பை கனவு தளர்ந்தது. ஆனால், காம்பீர், தோனி, யுவராஜ் சிங் ஆகியோர் உலகக்கோப்பையை பெற்று தந்தனர். அதுவும் தோனி அடித்த கடைசி சிக்ஸ் இன்னும் மறக்க முடியாத ஒன்றுதான்.  
 
அதேபோல சச்சினை மைதானம் முழுவதும் சக வீரர்கள் தூக்கிக்கொண்டு அவருக்கு செண்ட் ஆஃப் கொடுத்ததையும் எளிதில் மறந்துவிட முடியாது. எனவே இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடி வருகின்றனர். 
 
இந்நிலையில் ESNP தோனி அடித்த சிக்ஸை குறிப்பிட்டு ஒரு ட்விட் போட்டிருந்தது, இதற்கு காம்பீர் இந்த சிக்ஸ் மட்டுமே காரணம் அல்ல என்பதை போல டிவிட் போட்டுள்ளார். காம்பீர் அந்த தொடரின் இறுதிப்போட்டியில் 97 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்