ஆனால் 34 வயதாகும் விராட் கோலி, இன்னமும் தன்னுடைய பிரைம் பார்மில் இருந்து வருவதால் அவரால் இன்னும் சில ஆண்டுகள் டி 20 போட்டிகளில் விளையாட முடியுமென ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர். அதை நிரூபிக்கும் விதமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 2 சதங்களை விளாசினார்.
இந்நிலையில் பிசிசிஐக்கு புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளார். அவர் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரிடம் அவர்களின் எதிர்காலம் பற்றி ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அதில் அவர்களின் டி 20 எதிர்காலம் பற்றி விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.