அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்களை பறி கொடுத்தனர். அந்த அணியின் துவக்க வீரர் சாக் கிராலி மட்டும், நிதானமாக விளையாடி 50 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி, அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இருவரும் அரை சதம் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.