இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது மலையை சாய்ப்பது போல… ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:24 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதியும், இரண்டாவது பிப்ரவரி 17ஆம் தேதியும் , மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதியும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதனை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடரை வெல்ல இரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடர் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் “இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதே கடினமானது. டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல. நாங்கள் இந்த தொடரை வென்றால் அது ஆஷஸ் தொடரை வென்றதை விட மகிழ்ச்சியானதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்