கோலி பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் – ஸ்டீவ் ஸ்மித்தைக் கேட்ட ரசிகர்!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (08:02 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் என்ன சொல்வீர்கள் என ரசிகரின் கேள்விக்கு ஸ்டீவ் ஸ்மித் பதிலளித்துள்ளார்.

தற்போதைய கிரிக்கெட் உலகில் மூடி சூடா மன்னர்களாக விளங்கும் இரு பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும், ஸ்டீவ் ஸ்மித்தும் இருக்கின்றனர். இவர்கள் இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதம் ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கோலி லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டுகளில் சிறப்பாக விளையாடுவதாகவும், ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாகவும் விமர்சகர்களால் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித் கலந்துகொண்ட இன்ஸ்டாகிராம் உரையாடலில் அவரிடம் ஒரு ரசிகர் ‘கோலியைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் என்ன சொல்வீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு ஸ்டீவ் ஸ்மித்’குறும்பு(freak)’ எனக் கூறியுள்ளார். அதே போல தோனியைப் பற்றி கேட்ட போது ‘லெஜெண்ட் மிஸ்டர் கூல்’ என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்