ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவரது அணியின் தொடக்க வீரர் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதால் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்க ஆஸ்திரேலிய அரசு கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டது.
டெஸ்ட் தொடரில் வீரர்கள் அறையில் ஏற்பட்ட மோதல், களத்தில் வாக்குவாதம், ரசிகர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் மோதல் என பல்வேறு பிரச்சினைகளில் ஆஸ்திரேலிய அணி சிக்கியது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பான்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார்