தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற முதல் திருநங்கை

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (20:42 IST)
கனடா தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் திருநங்கை  களமிறங்கவுள்ளார்.

கனடாவில் பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ டுரூடோ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தேசிய மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள டேனியல் மெக்காஹே சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்ற முதல் திருநங்கை என்ற சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் வரும் செப்டம்பர் 4 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் டேனியர் மெக்காஹே களமிறங்கவுள்ளார்.

இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்த  நிலையில், 2021 ஆம் ஆண்டு தன் பாலினத்தை ஆணிலிருந்து அவர் பெண்ணாக மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்