என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்… சச்சின் வேண்டுகோள்!

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:37 IST)
சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சமீபத்தில் ரஞ்சிக் கோப்பை அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார்.

ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ரஞ்சித் கோப்பையின் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அர்ஜூன் தெண்டுல்கர் அசத்தியுள்ளார். கோவா அணிக்காக விளையாடியவர் 112 ரன்களுடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த 1988ஆம் ஆண்டு நடந்த ரஞ்சித் கோப்பையில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரும் முதல் போட்டியிலேயே சதமடித்த நிலையில் தற்போது அவருடைய மகனும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சச்சின் “என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். என் பெற்றோர் எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நான்தான் நான் என்ன ஆகவேண்டும் என்ற ஊக்கத்தோடு விளையாடினேன். அதையேதான் நான் என் மகனுக்கும் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்