முதல்வர் மருமகன் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்… நேரில் சென்று அஞ்சலி!

vinoth
செவ்வாய், 16 ஜனவரி 2024 (16:55 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். இவர் திமுக ஆட்சி ஏற்றபின் ஒரு முக்கியப் புள்ளியாக மாறினார். ஸ்டாலினுக்கு நெருங்கிய நபர்களில் ஒருவராக இருந்ததாக அவர் பற்றிய தகவல்கள் வெளியாகின.

ஆனால் சமீப மாதங்களாக அவர் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் சைலண்ட் ஆக இருந்து வருகிறார். இந்நிலையில் சபரீசனின் பெரியப்பா தியாகராஜன் காலமாகியுள்ளார்.

இதையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்