இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி(நாளை) தொடங்கி நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்ற பிறகு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் இது அவரின் விமர்சனத்துக்கான தண்டனை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசியுள்ள கவாஸ்கரும் அரசியல் காரணமாகவே ஹேசில்வுட் நீக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.