ஏலத்தில் எந்த டீமுக்கு செல்லப் போகிறீர்கள்?... போட்டியின் நடுவே ரிஷப் பண்டிடம் கேள்வி கேட்ட ஆஸி பவுலர்!

vinoth
வெள்ளி, 22 நவம்பர் 2024 (12:35 IST)
16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் முதலில் பேட் செய்துவரும் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் தடுமாறிய இந்திய அணியை ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி சற்று நேரம் காப்பாற்றினார். பின்னர் அவரும் 37 ரன்களில் அவுட்டானார்.

இந்த போட்டியில் நாதன் லயன் மற்றும் ரிஷப் பண்ட் இடையே நடந்த ஒரு உரையாடல் கலகலப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில் லயன் “ஐபில் ஏலத்தில் எந்த அணிக்கு செல்லப் போகிறீர்கள்?” எனக் கேட்க அதற்கு ரிஷப் பண்ட் சிரித்துக் கொண்டு “எந்த ஐடியாவும் இல்லை” எனக் கூறினார். அவர்களின் இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக் மூலமாக வெளியாகி ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்தது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்