துலீப் கோப்பை தொடரில் சதமடித்து அசத்திய புஜாரா!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (08:47 IST)
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு அடுத்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்நிலையில் இப்போது அதற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தன்னை நிரூபித்து மீண்டும் அணிக்குள் வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ள புஜாரா இப்போது துலிப் கோப்பைக்கான போட்டிகளில் வெஸ்ட் ஸோன் அணிக்காக விளையாடி வருகிறார்.

தற்போது மத்தியமண்டலத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 278 பந்துகளை சந்தித்த புஜாரா 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். புஜாராவின் சதத்தால் மேற்கு மண்டல அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்