இந்நிலையில் நியூஸிலாந்து வீரர்கள் முன்னதாக இஸ்லமாபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு 5 எஸ்.பிக்கள் உட்பட 500 போலீஸார் காவலுக்கு அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் இந்த போட்டிகள் ரத்தானது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஏகப்பட்ட பண இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதாதகுறைக்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு காவல் இருந்த காவலர்கள் நட்சத்திர விடுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பெயரை சொல்லி பிரியாணியாக மண்டியிருக்கிறார்கள். இதனால் பிரியாணி பில் மட்டும் 26 லட்ச ரூபாய் வந்துள்ளது. இந்த பில்லை கண்டதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாம்.