டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக கோலி, தனது ஃபார்மை இழந்து போராடி வருகிறார். கடைசியாக ஆஸி அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதமடித்தார். ஆனாலும் இன்னமும் தன்னுடைய பழைய ஃபார்மை அவர் மீட்டெடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது வர்ணனை செய்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் “கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது ஃபார்மை இழந்துவிட்டார். அவரால் ஃபார்மை மீட்கமுடியவில்லை. ஜோ ரூட் மற்றும் ஸ்மித் கடந்த காலங்களில் சேர்த்த ரன்களில் பாதியைக் கூட அவரால் சேர்க்க முடியவில்லை. அதனால் இனிமேல் fab 4 என்ற பேச்சுக்கே இடமில்லை” எனக் கூறியுள்ளார்.