ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு ஒரு நாள் டெஸ்ட் போட்டில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 100% அபராதமும், பேன்கிராப்டிற்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதமும் ஐசிசி விதித்துள்ளது.
இதனால் ஸ்மித்திற்கு ஆச்திரேலியா கிர்கெட் வாரியம், ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கபடும் என கூறப்படுகிறது.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் கூறியிருப்பதாவது;-
“ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஸ்டிவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து வெளிவர வேண்டும், அவர் செய்தது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது, செய்த தவறுக்கு குற்றம் சாட்டியதே போதுமானது. அவர்கள் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.