பாண்ட்யாவின் மிரட்டலான இன்னிங்ஸ்… உடனே தொப்பியைக் கழட்டிய பட்லர்!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:25 IST)
நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் செய்த செயல் ஒன்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் அணிகள் இனிவரும் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு சென்றுள்ளது.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் அவர் ஐபிஎல் சீசனின் லீடிங் ரன்னராக மாறினார். அதற்கு முன்னர் லீடிங் ரன்னராக இருந்த ஜோஸ் பட்லர் வசம் ஆரஞ்ச் தொப்பி இருந்தது. ஆனால் பாண்ட்யா தன்னை தாண்டி சென்றுவிட்டார் என்று தெரிந்ததும் பட்லர் உடனே ஆரஞ்ச் தொப்பியை தலையில் இருந்து கழட்டிவிட்டார். அதன் பின்னர் அவர் பேட்டிங்கில் அரைசதம் அடித்து மீண்டும் ஆரஞ்ச் தொப்பியை தக்கவைத்துக்கொண்டார். ஜோஸ் பட்லரின் இந்த செயல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்