கோலி மூன்றாவது டெஸ்ட்டில் விளையாடுவாரா? மழுப்பலான பதிலை சொன்ன டிராவிட்!

vinoth
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:55 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியானது.

கோலி, தனது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக உள்ளதால் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ தரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏனென்றால் அணிக்கு திரும்புவது குறித்து இதுவரை அவர் பிசிசிஐ தரப்பை தொடர்பு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட்டில் அவர் விளையாடுவாரா என்று அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிராவிட் “இதை நீங்கள் தேர்வுக்குழுவிடம்தான் கேட்கவேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் இன்னும் சில நாட்களில் இறுதி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவிக்க உள்ளார்கள். அப்போது கோலியிடம் பேசிவிட்டு இதுகுறித்து முடிவெடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்