இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக மட்டுமே தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் என பேட்டியளித்துள்ளார்.
ஆனால் பிசிசிஐ தரப்பில், தோனியின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது. அதில், உலகக் கோப்பை போட்டியின் போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட தோனி, அதைப்பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு எந்தவொரு தகவலும் சொல்லவில்லை. அதோடு ராணுவத்தில் இரண்டு மாதங்களாக பணியாற்ற சென்றுவிட்டார். இதனால் தான் தோனியின் ஒப்பந்தம் நீக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.