சிஎஸ்கே – கொல்கத்தா மோதல்; களமிறங்குவாரா பென் ஸ்டோக்ஸ்?

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (12:54 IST)
இன்று ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து முடிவை நெருங்கியுள்ளன. ப்ளே ஆப் சுற்றுகளுக்கு செல்ல 16 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில் 10 அணிகளும் பலமாக மோதி வருகின்றன.

இதில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை தனது ஹோம் க்ரவுண்டான சேப்பாக்கத்தில் எதிர் கொள்கிறது. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் 6 போட்டிகளில் 4 போட்டிகளை சிஎஸ்கே வென்றுள்ளது. முன்னதாக ஈடன் கார்டனில் வைத்து கொல்கத்தாவை சென்னை வென்றது. அதனால் இன்றைய போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் 15 புள்ளிகளில் உள்ள சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் சென்னை அணிக்கும் இது முக்கியமான போட்டியாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனின் தொடக்கத்தில் 2 போட்டிகளில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. சென்னை அணிக்கி இன்னும் 2 லீக் போட்டிகளே மீதமுள்ளதால் இன்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்