ஐபிஎல் கிரிக்கெட் 16 வது சீசன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், சென்னை கிங்ஸ், லக்னோ, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
தற்போது லீக் சுற்றுகள் நடந்து வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் குஜரராத், சென்னை, மும்பை மற்றும் லக்னோ அணிகள் முதல் 4 இடங்களைப் பெற்றுள்ளன.
சமீபத்தில், பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடியபோது, லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய , ஐபிஎல் போட்டி மற்றும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகினார்.
இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கிஉ வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை முடிந்துள்ளது. இதை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு நன்றி. மீண்டும் களத்திற்குத் திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.