நான்காவது டெஸ்ட்டில் பும்ராவுக்கு ஓய்வு?

vinoth

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:16 IST)
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்துவீசி வருகிறார் பும்ரா. ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவருக்கு தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அடுத்த போட்டியில் ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

முதலில் மூன்றாவது போட்டியிலேயே அவருக்கு ஓய்வளிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் அவர் ராஜ்கோட் டெஸ்ட்டில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்