நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய 182 ரன்கள் சேர்த்த ஸ்டோக்ஸ்… நியுசிலாந்தை பந்தாடிய இங்கிலாந்து!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:06 IST)
நியுசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சென்று ஒருநாள் போட்டித் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க விக்கெட்களை விரைவாக இழந்தாலும் மலான் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி நிலைத்து நின்று நான்காவது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது.

நான்காவது பேட்ஸ்மேனாக இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 182 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 368 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி 187 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 181 ரன்கள் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணி தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்