இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 332 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ராகுல் 60, புஜாரா 57, ரஹானே 46, அஸ்வின் 30, ஜடேஜா 63, சஹா 31 ரன்களும் எடுத்து வலுசேர்த்தனர்.
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 45 ரன்னும், மேத்தியூ வேட் 25 ரன்னும் எடுத்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா தரப்பில் ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டையும் புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 137 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 32 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் 106 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியுள்ளது. முதல் ஓவரில் 12 ரன் அடித்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது இந்தியா.