ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ், டெல்லி அணிகளுக்கு விளையாடியுள்ள வார்னருக்கு இந்தியாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் தாண்டி அவர் செய்யும் இன்ஸ்டா ரீல்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.
அந்த பேட்டில் “எந்த நடிகரோடு சேர்ந்து ரீல்ஸ் செய்ய விரும்புவீர்கள்?” என்ற கேள்விக்கு தான் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனோடு சேர்ந்து ரீல்ஸ் செய்ய விரும்புவதாக வார்னர் கூறியுள்ளார். அல்லு அர்ஜுனின் புட்டபொம்மா பாடலுக்கு ரீல்ஸ் செய்து வார்னர் ஏராளமான இந்திய ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.