பாருக்கு சென்ற பிரபல பாலிவுட் நடிகை விரட்டியடிப்பு!
திங்கள், 22 மே 2017 (17:31 IST)
பாலிவுட் நடிகை ஆலியா பட், வருண் தவான் நடித்த பத்ரிநாத் கி துல்ஹனியா படம் ரூ. 100 கோடி வசூல் செய்த சந்தோஷத்தில் உள்ளார். ஷாருக்கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை டேட்ஸ் இல்லை என்று ஷாருக்கிடம் மறுத்துள்ளார் நடிகை ஆலியா பட்.
தற்போது ஆலியா பட்டுக்கு 24 வயது ஆகிறது. அவரை பார்த்தால் மிகவும் இளமையாக தெரியும். இதனாலேயே அவருக்கு லண்டனில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. லண்டனில் பார் ஒன்றுக்கு சென்ற ஆலியா பட்டை பவுன்சர்கள் மைனர் என நினைத்து உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
ஆலியா தனது ஐடி கார்டை எடுத்துக் காட்டியும் பவுன்சர்கள் நம்பவில்லையாம். பாருக்கு வருவதற்காக ஆலியா போலி ஐடி கார்டு கொண்டு வந்ததாக நினைத்து அவரை பாருக்கு செல்ல அனுமதிக்கவில்லையாம். இதை ஆலியா பட்டே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.