ஒரு நாளைக்கு ரூ.6 கோடி: விளம்பரத்துக்கே இவ்வளவு சம்பளமா!
சனி, 28 ஜூலை 2018 (18:14 IST)
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 2007 ஆம் ஆண்டு சாவரியா படத்தின் மூலம் கதாநயகனாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுள் ஒருவராக உள்ளார்.
சமீபத்தில் சஞ்சு என்ற பெயரில் வெளியான படத்தில் சஞ்சய்தத் வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படம், ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர் மார்க்கெட்டும் உயர்ந்தது. படங்களில் நடிப்பதை தவித்து விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவற்றுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.3 கோடியில் இருந்து 3.5 கோடிவரை வாங்கினார்.
ஆனால், தற்போது விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ.6 கோடி நிர்ணயித்து உள்ளார். அந்த தொகையை கொடுக்க விளம்பர நிறுவனங்களும் சம்மதித்துள்ளனராம்.