இந்த கொரோனா நோய் தொற்று சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விஷால், எஸ்.பி பாலசுப்ரமணியம், பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி , நடிகர் கருணாஸ் உள்ளிட்ட பலர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டரில் "தனிமைப்படுத்தப்பட்ட 2 வாரங்கள் முடிந்தது! அறிகுறிகள் இல்லை. எனக்கும், எனது குடும்பத்தினருக்கு சோதிக்கப்பட்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எனினும் 3 வாரங்களுக்கு பிறகு தான் ஆன்டிபாடிஸ் உருவாகி இருக்கிறதா என பார்த்துவிட்டு பிளாஸ்மா தானம் செய்யலாமா என பார்க்கலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார்" என்றும் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.