தங்கள் நகரத்தைப் பாதுகாக்க பாட்டில் குண்டுகளைத் தயாரிக்கும் பெண்கள்

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (00:14 IST)
தங்கள் நகரத்தைப் பாதுகாக்க பாட்டில் குண்டுகளைத் தயாரித்து வருககின்றனர் பெண்கள்.
 
 
இந்த பெரிய யுக்ரேனிய நகரத்தின் மையத்தில், புல் தரையில் பெண்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதைக் கண்டோம். ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், அவர்களிடம் இருந்து வீடுகளையும் வீதிகளையும் பாதுகாக்கவும் அவர்கள் வீட்டிலேயே பாட்டில்கள் மூலம் நெருப்புக் குண்டுகளைத் தயாரித்திருக்கிறார்கள்.
 
ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகியோர் அடங்கிய பெண்கள் கண்ணாடி பாட்டில்கள், கிழிந்த துணிகள் எரிபொருள்களுடன் சூழ்ந்திருந்தனர். "மிகவும் திகிலூட்டுவதாக" இருந்ததால், உண்மையில் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் இருக்க முயற்சிப்பதாக அவர்கள் கூறினர்.
 
ஆனால் அவர்கள் எதற்கும் தயாராக இருக்க விரும்புகிறார்கள். இந்த நகரம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. ஆனால் இந்த போரின் தீவிரத்தை அது ஏற்கனவே உணர்ந்திருக்கிறது. ராணுவ மருத்துவமனையில் 400 படுக்கைகள் உள்ளன. அவை கிழக்கு யுக்ரேன் முழுவதிலும் இருந்து வந்த காயமடைந்த வீரர்களால் நிரம்பியிருக்கின்றன.
 
இந்த நகர மக்கள் திரள்கின்றனர். ஆனாலும் இதை விரும்பிச் செய்யவில்லை என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்