ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா?

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (21:52 IST)
ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது, இயேசு உயிர்த்தெழுந்ததாக நிலவும் நம்பிக்கையுடன் முட்டையும், முயலும் முக்கிய சின்னங்களாக பார்க்கப்படுகின்றன.
 
முட்டையும், முயலும் மறுபிறப்பின் சின்னங்களாக சில நாடுகளில் பார்க்கப்படுவதற்கும், இயேசு உயிர்தெழுதல் குறித்த நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு என்ன?
 
ஈஸ்டரும், நம்பிக்கைகளும்
இயேசு உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் தொடர்புடைய எந்த தலைப்பை எடுத்தாலும் அவை பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறுகின்றன.
 
மேலும் மத நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் இது தொடர்பாக பல கோட்பாடுகள் புழக்கத்தில் உள்ளன.
 
அவற்றுள் பல நூற்றாண்டுகளாகப் பரப்பப்படும் ஒரு கருத்தில் இயேசுவுக்கும், முயலுக்கும் இருக்கும் தொடர்பு விவரிக்கப்படுகிறது.
 
இயேசு, வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்ட பிறகு அவரது கல்லறைக்கு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் மேரி மகதலேனா சென்றார். அப்போது இயேசுவின் உடலை அபிஷேகம் செய்ய தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார் மேரி.
 
கல்லறைக்குச் சென்று பார்த்தபோது, இயேசுவின் கல்லறை திறந்து கிடந்தது. அப்போது கல்லறையில் சிக்கியிருந்த முயல், இயேசு உயிர்தெழுந்ததை பார்த்த முதல் உயிரினம் என்று நம்பப்படுகிறது.
 
இதன் காரணமாக ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பாக்கியம் முயலுக்கு கிடைத்தது. எனவேதான் சாக்லேட்டையும், முட்டையையும் முயல் சுமக்கிறது என்ற நம்பிக்கை ஒரு பிரிவினரிடையே நிலவுகிறது.
 
அதனாலேயே முட்டையும், மறுபிறப்பின் ஒரு சின்னமாக பார்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்