கையை சூப்பும் அல்லது நகங்களைக் கடிக்கும் குழந்தைகள், கிருமிகளுக்கு பழகிவிடுவதால், பிற்காலத்தில் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவது குறைவு என்று நியுசிலாந்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது.
சுமார் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வயதானவர்களாக வளரும் வரை கண்காணித்த இந்த ஆய்வு இந்த இரு பழக்கங்களையும் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஒவ்வாமை வருவது சற்று அதிகமாகக் காணப்படுவதாகவும், அந்தப் பழக்கங்களில் குறைந்தது ஒன்றையாவது வைத்திருந்தவார்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவாகவும் இருந்ததாகக் கூறியது.