கடலில் அதிக அளவு சிறிய பிளாஸ்டிக் துகள்கள் செறிந்து கிடப்பது, கடலிலுள்ள இளம் மீன்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவை தெரிவுச் செய்வதில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தி பேரழிவை விளைவிக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அவை மெதுவான இயக்கமுடையவையாகி, உருவத்தில் சிறியவையாகி, எளிதில் இரைக்காக தாக்குதலுக்கு உள்ளாகும் மீன்களாக மாறிவிடுகின்றன.
கடலிலும், பெருங்கடலிலும் இறுதியாக வந்து சேரும் ஒப்பனைப் பொருட்களிலும், சோப்புக்களிலும் கலந்துள்ள நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் பயன்படுத்துவதை உலகளவில் தடைசெய்யும் வாதத்திற்கு இந்த ஆய்வு முடிவுகள் வலுசேர்ப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.