சோதிடம்

தனுசு
இந்த வாரம் இறுதியில் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். வார இறுதியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு: கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு: பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.