சோதிடம்

மிதுனம்
தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியா பாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றை யும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக் களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். வார தொடக்கத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.