சோதிடம்

மகரம்
நியாயம், நேர்மை, இதுதான் வாழ்க்கை என்று எண்ணும் மகர ராசியினரே, இந்த மாதம் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வரும் வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடை கள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும்.