மே மாத ஜோதிட பலன்கள் 2021: மகரம்

கிரகநிலை: ராசியில் சனி - தன ஸ்தானத்தில் குரு (அதி. சா) - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராஹூ - ரண் ருண ரோக  ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலவரம் உள்ளது.

பலன்:
எடுத்த காரியத்தை முடிக்காமல் அடுத்த காரியத்தை பார்க்காத மகர ராசியினரே இந்த மாதம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை  எடுப்பீர்கள்.
 
தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த  ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.
 
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள  ஆர்வம் உண்டாகும்.
 
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.  உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர்  மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். 
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
 
உத்திராடம்:
இந்த மாதம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும். பணதேவை உண்டாகும்.  அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மன குழப்பம் ஏற்படும்.
 
திருவோணம்:
இந்த மாதம் முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான  நேரத்தில்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில்  கூடுதல் கவனம் தேவை. 
 
அவிட்டம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். பணப்புழக்கம் சரியாக இருக்கும். 
 
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: : திங்கள், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்