மிதுனம்: ஆவணி மாத ராசி பலன்கள்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:35 IST)
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம் - எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய மிதுன ராசியினரே நீங்கள்  பிடிவாத குணம் உடையவர். எடுத்த முடிவில் மாறாதிருப்பவர். 
இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி புதன் ராசிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகுவுடன் சேர்க்கை பெற்று இருப்பதால் ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல்  கவனமாக  இருப்பது நல்லது.  
 
தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம்  இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. 
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் கேதுவுடன் சஞ்சாரம் செய்வதால் கணவன்,  மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. 
 
பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு வீண் பயணம்  ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம்  தேவை.  பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். 
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகளும் வாங்க  முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க  வேண்டியிருக்கும். 
 
திருவாதிரை: பணவரவுகளிலும் திட்டங்களிலும் நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கித்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டம். தேவையற்ற  வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணி புரிபவர்களுக்கு தேவையற்ற  பிரச்சனைகள் உண்டாகும். 
 
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: பெயர், புகழைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களையும் சரிவர  செய்து முடிக்க விடாமல் உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். குடும்பத்திற்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 24, 25
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டமப்ர் 11, 12
 
பரிகாரம்: அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்தில் தாயாரை வணங்கி வர முன் ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்