பாதஹஸ்தாசனம்

பாத‌மஎ‌ன்றா‌லகா‌ல்க‌ள், ஹ‌ஸ்த‌மஎ‌ன்றா‌லஎ‌ன்றபொரு‌ள். இ‌ந்ஆசன‌த்‌தி‌லகா‌ல்களையு‌ம், கைகளையு‌மஒ‌ன்றாஇரு‌க்கு‌மபடி செ‌ய்வதா‌லஇத‌ற்கபாதஹ‌ஸ்தாசன‌மஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌கிறது.

செ‌ய்முறை :

விரிப்பின் மீது கால்களை சேர்த்து வைக்கவும்.

கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து தலைக்குமேல் காதுகளை ஒட்டியவாறு கைகளை மடிக்காமல் மேலே ‌நீ‌ட்டவு‌ம்.

மூ‌ச்சை வெ‌ளியே ‌வி‌ட்டு, மெதுவாக முன்னால் குனிந்து பாத‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் காலை‌ப் ப‌ற்‌றி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதனை வேறு முறை‌யி‌லு‌ம் செ‌ய்யலா‌ம். அதாவது உ‌ள்ள‌ங்கைககளை தரையில் படிமானமாய் வை‌த்து‌ம் செ‌ய்யலா‌ம். இர‌ண்டுமே ஒரே ஆசன‌ங்க‌ள்தா‌ன்.

உ‌ங்க‌ள் தலை, மூ‌ட்டி‌க்கு நேராக வரு‌ம்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இதே ‌நிலை‌யி‌ல் சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை இருக்கவும். கால் முட்டி வளைக்க‌க் கூடாது.

WD
கைகளை தளர்ச்சி செய்து மெதுவாக நிமிரவும். உடன் கைகளை உயர்த்தி நிற்கவும்.

கைகளை மெதுவாக பக்கவாட்டில் கொண்டு வந்து சிறிது ஓய்வு எடுக்கவும்.

மறுபடியும் முன்பு கூறியபடி செய்யவும் மூன்று முறை செய்து ‌வி‌ட்டு ஓய்வு எடுக்கவும்.

மு‌க்‌கிய‌க் குற‌ி‌ப்பு: இ‌ந்த ஆசன‌த்தை முதுகு‌த்த‌ண்டு‌ப் பகு‌தி‌யி‌ல் அ‌ல்லது அ‌டிவ‌யி‌ற்‌றி‌ல் ‌பிர‌ச்‌சினை இரு‌ப்பவ‌ர்க‌ள் செ‌ய்ய வே‌ண்டா‌ம்.

பலன்கள் :

இ‌ந்த ஆசன‌ம், ‌‌ஜீரண‌ உறு‌ப்புக‌ள் ‌சீரா‌க வேலை செ‌ய்ய உதவு‌ம்.

உடல் எடை, தொந்தி குறைகிறது. ஆண்மையின்மை, மலட்டுத்தனம் ஆகியவற்றை போக்குகிறது.

சீரான இரத்த ஓட்டத்தை மூளை பெறுகிறது. இருதயம், நுரையீரல் ஆகியவை வலிமை பெறுகிறது.

தொடை‌ப் பகு‌தி தசைக‌ள் வலுவடை‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்