யோகா என்பது நமது உடலை சீராக இயங்க செய்வதற்கான பயிற்சிகளாகும்.
பலரும் யோகாக் கலையை நன்கு அறிந்திருப்பார்கள். எனினும் அது பற்றி பல சந்தேகங்களும் இருக்கும்.
அனைத்திற்கும் விளக்கமளிக்க தமிழ்.வெப்துனியா.காம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
அதாவது யோகக் கலை பயின்று, சென்னையில் உள்ள பல் பள்ளிகளுக்கு யோகா பயிற்சி அளித்து வரும் திரு. சுப்ரமணியன் என்பவரை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.
கோயமுத்தூரைச் சேர்ந்த இவர் தற்போது வசிப்பது சென்னையில். விளையாட்டாக தனது 7ஆம் வகுப்பு பள்ளி படிப்பின் போது யோகா பழகி தற்போது அதில் ஆசிரியராகத் திகழ்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த மணி என்பவரிடம் இவர் யோகக் கலை பயின்றுள்ளார். ஜிம்னாஸ்டிக் கலையும் கற்றவர்.
உடல் நலத்தைப் பற்றியும், யோகாவின் பலன் குறித்தும் இவர் அளிக்கும் விளக்கங்கள் பொதுமக்களுக்கு அதிக பலன் அளிக்கும் வகையில் அமையும்.