மாணவர்கள் எப்போது படிக்கலாம்?
சனி, 7 நவம்பர் 2009 (16:07 IST)
பொதுவாகவே அதிகாலையில் எழுந்து படித்தால் மாணவர்களுக்கு படித்தது நினைவில் நிற்கும் என்று பொதுப்படியாகக் கூறப்படுகிறது. நமது நினைவாற்றல் மற்றும் உடலின் அமைப்புகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுவதாகக் கூறுகிறார் நமது யோகா ஆசிரியர் சூப்ரமணியன்.
அதாவது பெண்களுக்கு காலையில் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்றும், மாலையில் ஆண்களது மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்றும் கூறுகிறார் இவர்.
அதன்படி பார்த்தால், பெண்கள் அதிகாலையில் எழுந்து வேலைகள் செய்வதும், மதியத்திற்கு மேல் நன்கு தூங்குவதையும் பார்க்கிறோம். அதே சமயம் ஆண்கள் காலையில் நேரம் கழித்துத்தான் எழுவார்கள். எழுந்ததும் சுறுசுறுப்பாக செயல்படாமல் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். ஆனால் மாலை வேளையில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
படிப்பிலும், பெண்கள் காலையில் எழுந்து படிப்பதைப் பார்க்கிறோம். மாணவர்களோ இரவில் வெகு நேரம் வரை கூட படிப்பதைக் காண்கிறோம்.
எனவே, மாணவர்கள் மாலையிலும், மாணவிகள் காலையிலும் படிப்பதால் அவர்களது நினைவில் படித்த பாடங்கள் எளிதாக நிற்கும் என்கிறார் யோகா ஆசிரியர் சுப்பிரமணயன்.