உட‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ண்டா‌ல்தா‌ன் மது அரு‌ந்த முடியு‌ம்

சனி, 2 ஜனவரி 2010 (12:17 IST)
மது அரு‌ந்து‌ம் பழ‌க்க‌ம் ‌நிறைய பேரு‌க்கு உ‌ள்ளது. ‌மது ‌பிடி‌க்காத சில‌ரு‌ம் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். மதுவை அரு‌ந்‌தி பழ‌க்க‌மிரு‌ப்பவ‌ர்களு‌ம், ‌சில ஆ‌ண்டுக‌ள் க‌ழி‌த்து அதனை ‌வி‌ட்டு விடு‌கி‌ன்றன‌ர். இ‌வை அனை‌த்‌தி‌ற்கு‌ம் காரண‌ம் அவ‌ர்களது உட‌லி‌ல் உ‌ள்ள செ‌ல்‌லி‌ன் அமை‌ப்பே எ‌ன்று கூறு‌கிறா‌ர் எமது யோகா ஆ‌சி‌ரிய‌ர் சு‌ப்ரம‌ணிய‌ம்.

ஒருவ‌ர் உட‌லி‌ல் உ‌ள்ள செ‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ண்டா‌ல் ம‌ட்டுமே அவ‌ர் மது அரு‌ந்த முடியு‌ம். எ‌ல்லோராலு‌ம் மது அரு‌ந்த முடியாது. பலரு‌ம், மது அரு‌ந்துவதை ‌விட, அத‌ற்கு‌ப் ‌பி‌ன் ஏ‌ற்படு‌ம் ஒரு‌வித ‌கிள‌ர்‌ச்‌சி‌க்காகவே அதனை அரு‌ந்து‌கிறா‌ர்க‌ள். மது அரு‌ந்து‌ம் எ‌ல்லோரு‌க்குமே அதனா‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌வ‌தி‌ல்லை.

யாரு‌க்கு மது ஒ‌த்து‌க் கொ‌ள்ளாதோ, அவ‌ர்க‌ள் மதுவை அரு‌ந்து‌ம் போது அத‌னா‌ல் உட‌லி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. ஒரு உட‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாத ‌ஒ‌ன்றை அரு‌ந்து‌ம் போது, அ‌ந்த பொரு‌ளினா‌ல் உட‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது இய‌ல்புதானே.

ஒரு ‌சிலரு‌க்கு மது அரு‌ந்து‌ம் பழ‌க்க‌ம் இரு‌ந்து, ‌சில கால‌ம் க‌ழி‌த்து ‌‌வி‌ட்டு ‌விடுவா‌ர்க‌ள். இத‌ற்கு‌ம் அவ‌ர்களது செ‌ல்தானே மு‌க்‌கிய‌க் காரணமாக அமை‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்