நாய் என நினைத்து ஒநாயை செல்லப்பிராணியாக வளர்த்த நபர்

வியாழன், 17 நவம்பர் 2016 (15:41 IST)
நாய்க்குட்டி என நினைத்து, அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், ஓநாயை செல்லப்பிராணியாக வளர்த்த சம்பவம் தெரிய வந்துள்ளது.


 

 
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், நாய் குட்டிகள் இலவசமாக விற்கப்படும் ஒரு இடத்திற்கு சென்று ஒரு குட்டியை கொண்டு வந்து தனது வீட்டில் வளர்க்கத் தொடங்கினார். அதற்கு நியோ எனவும் பெயரிட்டார். 
 
ஆனால், அந்த நாய்க்குட்டி வளர வளர அதன் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததை அவர் உணர்ந்தார். ஏனெனில் நியோ யாரிடமும் ஒட்டவில்லை. மற்ற நாய் குட்டிகளை போல் துறு துறுவென இருந்தாலும், மற்ற நாய்களுடன் அது நட்பு பாராட்டவில்லை. ஆனால், நியோவின் எஜமானிக்கு மட்டும் அது கட்டுப்பட்டது. 
 
நியோவின் நடவடிக்கை அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அதன் எஜமானர், நியோவை அரிசோனா மனித சமூக மையத்திற்கு அழைத்து சென்று தீர்வு காண முயன்றார். அங்கு செய்யப்பட்ட சோதனையில், நியோ ஒரு நாய் அல்ல என்பதும் அது ஒரு ஓநாய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
ஓநாயை செல்லப்பிராணியாக வளர்க்க அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கலிபோர்னியா உள்ள ஓநாய்கள் காப்பகத்தில் நியோவை ஒப்படைத்தார் அந்த நபர். தற்போது, அந்த காப்பகத்தில் உள்ள மற்ற ஓநாய்களோடு மகிழ்ச்சியாக பொழுதை கழுக்கிறது நியோ.

வெப்துனியாவைப் படிக்கவும்