இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள உலக வங்கி கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ள 100 நாடுகளுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் ” உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் உலக நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்நிலையில் மக்கள் தொகை அதிகமுள்ள 100 நாடுகளுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதி வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. ஒந்த 100 நாடுகள்தான் உலக மக்கள் தொகையில் 70 சதவீதத்தை தங்களிடத்தே கொண்டுள்ளன. இந்த நாடுகளில் 39 நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன.
உலக நாடுகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சுகாதார அவசர நிலையை அறிவிக்க வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு உதவ வேண்டும். பொருளாதார பின்னடவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும், இதுதான் உலக வங்கியின் குறிக்கோள்” என அவர் தெரிவித்துள்ளார்.