தரையிரங்கும் நேரத்தில் விமானத்தில் இருந்து குதித்த பெண்!!

செவ்வாய், 29 நவம்பர் 2016 (16:34 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் என்ற பகுதியில் புஷ் இண்டர்காண்டினென்ஷியல் விமான நிலையம் உள்ளது.


 
 
அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மெக்சிகோவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.
 
அப்போது தரையிரங்குவதற்காக தரைதளத்தை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானத்தின் அவசர வழியான ஜன்னலை திறந்து இளம் பெண் ஒருவர் குதித்து ஓடியுள்ளார்.
 
இதனால் சற்று பதற்றமடைந்த சக பயணிகள், விமான பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணை விமான நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 
 
சுமார் 15 அடி உயரத்தில் இருந்து குதித்த அப்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்